ஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை
Share

Hezbollah operatives Yemen Saudi Joint attack kills 8 people Tamil news
ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் சவூதி எல்லைப்பகுதியில் சவூதி அரசின் கூட்டுப்படைகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.