துருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு
Share

Air Force attack Turkey kills 15 Kurdish rebels midleeast Tamil news
ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.
இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்து தங்கியுள்ள வடக்கு ஈராக்கில் துருக்கி விமானப் படையினர் நேற்று வான் தாக்குதல் நடத்தினர். இதில், சுமார் 15 குர்திஷ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என டுவிட்டர் மூலம் துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.