பஹ்ரைன் வாழ் வெளிநாட்டவர்களின் உயர் மட்ட பதவிகளுக்கு ஆப்பு வைத்த சட்டம் !
Share

Request reserve certain jobs citizens Bahrain midleeast Tamil newsws
பஹ்ரைனிலும் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு மட்டும் என ஒதுக்கக் கோரிக்கை
சவுதி, ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் சில குறிப்பிட்ட துறைகளிலுள்ள வேலைவாய்ப்புக்களை தனது சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே என ஒதுக்கியுள்ளன. இந்த அடிப்படையில் பஹ்ரைனிலும் சில துறைகளின் வேலைவாய்ப்புக்களை தனது குடிமக்களுக்கு மட்டுமே என சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் காஸி அல் ரஹ்மா பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு எதிர்ப்புகள் ஏதுமின்றி ஏகமனதாக பஹ்ரைன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் வெளிநாட்டினரால் ஆண்டுதோறும் வெளியில் அனுப்பப்படும் சம்பளத்தொகையான 4.2 பில்லியன் பஹ்ரைன் தீனார் என்பதில் இனி பெருமளவு மிகுதியாகும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
குடிமகன்களுக்கே முதல் உரிமை என்ற அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பஹ்ரைன் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் இந்தக் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு இன்று மீண்டும் ஒட்டெடுப்பு வருகின்றது.
குறிப்பாக கணக்காளர்கள், சிறப்பு மனிதவளத் துறையினர், சட்ட ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள், நிதித்துறை நிபுணர்கள், சிறப்பு தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்கள் போன்ற பல துறைகளின் உயர்மட்ட பொறுப்புக்களை பஹ்ரைன் நாட்டவர்களுக்கே வழங்க வேண்டும் என கோடிட்டு காட்டியுள்ளார். இதன் மூலம் பஹ்ரைன் நாட்டவர்கள் மத்தியில் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை குறையும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.