அரச பெண்ணை சீண்டி பார்த்த இந்தியர் !
Share

King Qatar hack sister Email address Kerala man arrested 5 crore scam
கட்டார் மன்னரின் தங்கை இ-மெயில் முகவரியை ஹேக் செய்து, 5 கோடி மோசடி செய்த கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் மேனன் (47). கட்டார் நாட்டில் நீண்டகாலம் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இதனால் இவருக்கு அங்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. இந்த நிலையில் சுனில் மேனன் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பினார். பின்னர் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்தார்.
அதில் நஷ்டம் ஏற்பட்டதால், எளிதில் பணம் சம்பாதிக்க மோசடி வேலையில் ஈடுபட திட்டமிட்டார்.
இதன்படி கட்டார் நாட்டில் உள்ள தனது நண்பர்கள் உதவியுடன், கட்டார் மன்னரின் தங்கையான ஷேக் அல் பயாசாவின் இ-மெயில் முகவரியை கண்டுபிடித்தார்.
இந்த இ-மெயிலை ஒரு ஆப் மூலம் ஹேக் செய்தார். தொடர்ந்து ஷேக் அல் பயாசாவின் இ-மெயில் முகவரியில் இருந்து கட்டார் நாட்டு அருங்காட்சியக அமைப்பின் முதன்மை அதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்பி கடந்த பிப்ரவரி மாதம் 5.20 கோடி பணம் மோசடி செய்தார்.
தங்க ஓவியம் தொடர்பாக இந்த மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சுனில் கைது செய்யப்பட்டார்.