பிச்சைகாரரின் தட்டில் லட்ச ரூபாய் !
Share

Dubai Beggar arrested 1lakh midleeast Tamil news
அமீரகத்தில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்றாலும் இஸ்லாமியர்களின் ஈகை குணத்தை பயன்படுத்தி பிச்சைக்காரர்களை இறக்குமதி செய்வதை சில நிழலுலக பேர்வழிகள் செய்து வருகின்றனர்.
குறிப்பாக புனித ரமழான் மாதத்தில் மிக அதிகமாக நமது இந்தியாவின் அண்டை நாடு ஒன்றிலிருந்து இந்த நிழலுலக கும்பலால் பிச்சை எடுக்க ஆட்கள் மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றனர்.
துபாயின் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஆசிய நாடு ஒன்றைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை கண்ட துபாய் போலீஸார் அவரை கைது செய்து சோதித்தனர்
அப்போது அவரிடம் 45 திர்ஹங்கள் மட்டுமே இருந்தன. சந்தேகமடைந்த போலீஸார் மேலும் சோதித்ததில் செயற்காலுக்குள் பல நாட்டு நாணயங்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் திர்ஹங்களாகும். இந்த பிச்சைக்காரர் 1 மாதத்திற்கு முன்பு தான் விசிட் விசாவில் துபாய்க்கு வந்திருந்ததும் தெரியவந்தது.
கடந்த 1 மாதத்தில் மட்டும் 136 ஆண்கள், 107 பெண்கள் என 243 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக துபாய் போலீஸார் தெரிவித்துள்ளதுடன் இதுபோல் பிச்சைக்காரர்கள் நடமாட்டத்தை கண்டால் 901 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.