ஆண்கள் இயக்கும் கார்களில் இரவில் பெண்கள் பயணிக்கத் தடை
Share

Women prohibited travel night cars run men midleast tamil news
சீனாவின் பெய்ஜிங் நகரில் இரவு 10 மணிக்கு மேல், ஆண்கள் இயக்கும் கார்களில், பெண்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கார் உள்ளிட்ட பயணிகள் வாகனத்தை பகிர்ந்து கொள்ளும் car pooling முறை நடைமுறையில் உள்ளது.
இதற்காக Didi, car 2 share உள்ளிட்ட மொபைல் அப்ளிகேசன்களை சீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் ஆண் ஒருவரின் காரை பகிர்ந்து கொண்டு பயணித்த 21 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார்.
அதேபோல், பெய்ஜிங் அருகே மற்றொரு பெண்ணையும், காரை பகிர்ந்து கொண்ட நபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து, இரவு 10 மணிக்கு மேல் ஆண்கள் இயக்கும் கார்களில் பெண்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவில் பெண்கள் இயக்கும் கார்கள் இருப்பதால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.