ட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை ?
Share

pig referring apple Country win Football world cup match
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றால் அங்கு மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு நாய், கிளி உள்ளிட்ட உயிரினங்களின் செய்கைகளை கவனிப்பது வழக்கம்.
அந்த வரிசையில் பன்றி ஒன்றும் இணைந்துள்ளது. மிஸ்டிக் மார்கஸ் என்ற பெயருடைய அந்தப் பன்றியின் கூண்டுக்கு அருகே காலபந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுளின் கொடி பொறித்த ஆப்பிள் பழங்களை வைக்கின்றனர். எந்தக் கொடி பறக்கும் பழத்தை பன்றி ருசித்ததால் அந்த நாடு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் கொடி கட்டிப் பறக்கிறது
இந்தப் பன்றி ஏற்கனவே அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றும், பிரக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்பதையும் சரியாக கணித்திருந்தது.
இதே போல் கடந்த உலகக் கோப்பையின் போது பவுல் என்ற ஆக்டோபஸின் செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.