அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு!
Share

Eid holidays government employees UAE announced midleeast Tamil news
அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு
அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை 3 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிறை காணப்படுவதின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளியன்று பெருநாளாக இருந்தால் ஜூன் 17 வரை அமீரக அரசு அலுவலகங்கள் செயல்படாது. திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும்.
30 நோன்புகள் பூர்த்தியாகி சனிக்கிழமை பெருநாளாக இருந்தால் அரசு அலுவலகங்கள் திங்கட்கிழமை வரை திறக்கப்படாது, மீண்டும் செவ்வாய்கிழமை முதல் இயங்கத் துவங்கும்.
தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றன