தமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு
Share

30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa made research North east)
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.
தமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும் வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும். இதனால் அவர்களால் யுத்தத்தை 30 வருட காலம் முன்னெடுக்க முடிந்தது என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடிவாகும்.
எனவே, தமிழர்களுகளின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா? சுதந்திரமா? என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.
உதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்து விட்டால், தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.
எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டன.
இதனால் தற்கொலைகளும் அதிகரித்து விட்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களாகவே இவை உள்ளன என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tamil News Group websites
Tags:gotabaya rajapaksa made research North east,gotabaya rajapaksa made research North east,gotabaya rajapaksa made research North east