சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
Share

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya )
இந்த சம்பவம் நேற்று (05) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுவனின் தந்தை வர்தக நிலையம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்ய போது, தான் கொண்டு வந்த பையில் சொக்லெட் வகைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து சாப்பிடுமாறும் தனது மகனுக்கு கூறியுள்ளார்.
தந்தை கூறியதை அடுத்து இந்த சிறுவன் தனது தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மருந்து வில்லை காட் ஒன்றே கிடைத்துள்ளதாகவும் குறித்த மருந்து வில்லைகளை சொக்லெட் என நினைத்து உட்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அறிந்து கொண்ட வீட்டார் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர், கிளங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மருந்து வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்த சிறுவன் ஸ்ரீ மனோகரன் மர்வின் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ,Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ,Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ,