வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
Share

(8 month old infant abducted Vavuniya incident mother statement)
வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தையை வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். லண்டனிலுள்ள தனது கணவனே கடத்தலை செய்வித்துள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்டனிலுள்ள ஒருவரை இந்தியா சென்று திருமணம் செய்துள்ளார்.
கணவன் லண்டன் சென்றதும் யுவதி வவுனியாவில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் கணவன் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது தெரியவந்ததன் காரணமாக இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக யுவதி கணவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதன்போது கணவன் தனது குழந்தை தருமாறு மிரட்டியதுடன், குழந்தையை கடத்துவேன் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தாயாருடன் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது வேன் ஒன்றில் வந்த சுமார் 8 பேர் கொண்ட குழுவினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர்.
குழந்தை கடந்தப்பட்டு சிறிது நேரத்தில் லண்டனிலுள்ள கணவன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் இந்தக் கடத்தல் தனது கணவனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
வானிஷன் என்ற 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
-
- வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
- தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்
- கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி
- வற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் !
- பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்
- “சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:8 month old infant abducted Vavuniya incident mother statement,8 month old infant abducted Vavuniya incident mother statement,
-
-