ஐபோனுக்காக உயிரை விட்ட மாணவன் : யாழில் விபரீதம் சம்பவம்
Share

(student commits suicide jaffna neervely)
யைடக்கத்தொலைபேசி வாங்கித் தருமாறு கோரிய மாணவன், அது வாங்கித் தரப்படாமையினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது
யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கோபு (வயது-17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை.
கடந்த 25ஆம் திகதி தாயாரிடம் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி வாங்கித் தருமாறு கோரியுள்ளார். தாய் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அடுத்த நாளும் அதனைக் கோரியுள்ளார்.
தாயார் மறுத்துள்ளார். அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். சிறிது நேரத்தில் கதவை, தாயார் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த தயார் ஜன்னல் ஊடாகப் பார்த்தபோது, மகன் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக கயிற்றை அறுத்து, அவரை நோயாளர்காவு வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும், உயிரிழந்த மாணவனிடம் ஏற்கனவே இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளதாகவும், இறப்பு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது. இறப்பு விசாரணையை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:student commits suicide jaffna neervely,student commits suicide jaffna neervely,
-
-
-