புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் இவர்கள் தான்! முழுவிபரம்
Share

(New diplomatic ministers Deputy Ministers sworn today President)
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மூன்றாவது தடவையாகவும் நேற்றைய தினம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில் இன்று காலை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய பாலித ரங்கே பண்டார நீர்வள, நீர்முகாமைத்துவ, இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும்,
மொஹான் லால் கிரேரோ உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும்,
மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார இராஜாங்க அமைச்சராக திலிப் வெதஆராச்சியும்,
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஆ.டு.யு.ஆ ஹிஸ்புல்லாவும்,
தோட்டத் தொழில்கள் இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாசவும்,
பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை, மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்னவும்,
விளையாட்டு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜய விக்ரமவும்,
மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வீரகுமார திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் பிரதி அமைச்சராக அமீர் அலி சியாப்தீனும்,
காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சராக துனேஸ் கன்கந்தவும்,
சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்கவும்,
கருணாரத்ன பரனவிதாரண அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாய்ப்பு மற்றும் மலை நாடு மரபுரிமை பிரதி அமைச்சராகவும்,
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சாரதி துஸ்மந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பாலித குமார தெவரப்பெருமவும்,
தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக மனுஷ நாணயக்காரவும்,
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கமும்,
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக அலி சாஹிர் மௌலானவும், அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சராக ர்.ஆ.ஆ ஹாரிசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
(New diplomatic ministers Deputy Ministers sworn today President)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- படத்தில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!
- புதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி
- தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!
- டெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா? : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்!
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news