Live Chat இல் தனது ரசிகர்களை சந்திக்கவிருக்கும் ‘போல்ட் பொண்ணு’ அபர்ணதி
Share

(Enga Veedu Mappilai Contestant Abarnathi Live Chat Meet Fans)
எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி ஒருவாறு முடிந்து மக்களின் கோபமும் தனிந்து விட்டதென்றே சொல்லலாம்.ஆர்யாவும் தனது நடிப்புக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். அவரின் நடிப்பில் கஜினிகாந்த் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தற்போது பிரபலங்களாகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். பேட்டிகள், நிகழ்ச்சிகள், மற்றும் ஷோகளுக்கு விருந்தினர்களாக செல்வதென்று அனைவரும் எதோ ஒருவகையில் பிஸியாகவே உள்ளனர்.
இது இவ்வாறிருக்க, நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்களின் அனைவரையும் கவர்ந்த தமிழ்நாட்டுப் பெண் அபர்ணதி இறுதிப்போட்டிக்கு முன்னராக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இவரின் நேரான பேச்சு, வெளிப்படையாக பேசுவது, யாருக்கும் உண்மையாக இருப்பது என்று அவரின் நல்ல குணங்கள் பல ரசிகர்களை சம்பாதித்திருந்தது. இந்நிலையில் அபர்ணதி சில நாட்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார்.
விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும், அனைவரோடும் தான் பேசுவேன் என்றும், தனக்காக குரல் கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அதை காணொளியாக பதிவேற்றியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.
இதில் விஷேசம் என்னவென்றால் அபர்ணதி ஆமிக்கும் அவர் விஷேச அழைப்பு கொடுத்திருக்கிறார். பொறுத்திருந்து பாப்போம், ரசிகர்களோடு என்ன பேசப்போகிறார் என்று.
Tag: Enga Veedu Mappilai Contestant Abarnathi Live Chat Meet Fans