துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!
Share

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news
ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி அதிகம்.
இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு ரூ.6.8 கோடி லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. “வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லாட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.
மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.