Type to search

அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்” – ஈரான் மிரட்டல்

Middle-East Head Line Middle-East Top Story

அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்” – ஈரான் மிரட்டல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

destroy everything United States Iran intimidation midleeast Tamil news

தெஹ்ரான், 2015ல் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியதோடு ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகையில், “இதற்காக அமெரிக்கா மிகவும் வருத்தப்படவேண்டியது இருக்கும். ஈரான் சமாதானத்தின் தாய். எனவே எங்களுடன் சமாதானமாக செல்லுங்கள். மாறாக ஈரானுடன் போரிட்டால் ஈரான் போர்களின் தாய் என்பதை உணர வைப்போம்” என்று எச்சரித்து இருந்தார்.

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு டுவிட்டரில், “இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும்.”

என்று குறிப்பிட்டு இருந்தார்.ஈரான் மீண்டும் மிரட்டல்இந்நிலையில், ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், “அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்” என ஈரான் சிறப்பு படை கமாண்டோ அதிபர் டிரம்பை எச்சரித்துள்ளார்.

டிரம்ப் போரை தொடங்கினால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் தெரிவித்துள்ளார்.

destroy everything United States Iran intimidation midleeast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: