Type to search

அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு !

Middle East Middle-East Head Line Middle-East Top Story

அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு !

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

Hajj pilgrimage refuses allow unauthorized holy macaque mideleast tamilnews

ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு

புனித ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதி பெறாதவர்கள் ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் வர்த்தகப் பணிகளில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக வெளிநாட்டினர்களையும் அவர்களது வாகனங்களை மக்காவை சுற்றியுள்ள எல்லை நுழைவாயில்களிலிருந்து திருப்பியனுப்பும் பணி கடந்த ஜூலை 9 முதல் முழுவீச்சில் துவங்கியுள்ளது.

இவ்வாறாக கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 72,037 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அவர்களின் 30,449 வாகனங்களும் மக்கா எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.

ஆயிஷா பள்ளி அருகேயுள்ள தனீம், தாயிப் நகரின் சாயில் அருகேயுள்ள புகைத்தா, புதிய மற்றும் பழைய ஸூமைஷி, காக்கியா, ஷரயா போன்ற சோதனைச்சாவடிகளிலிருந்து வாகனங்களும் வெளிநாட்டினரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை 3 வகையான பிரிவினருக்கு மட்டும் புனித மக்காவினுள் நுழைய அனுமதியளிக்கப்படுகிறது.
ஹஜ் பெர்மிட் உடையவர்கள், புனித மக்கா பிரதேச விசா உடையவர்கள் மற்றும் மக்காவினுள் பணியாற்ற சிறப்பு அனுமதி பெற்றவர்கள்.

புனித மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களில் பணியாற்றிட சிறப்பு அனுமதி இந்த வருடம் முதல் ஆன்லைன் வழியாக வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 Hajj pilgrimage refuses allow unauthorized holy macaque mideleast tamilnews

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: