Type to search

மக்காவில் புனித குர்பானிகடமைகளுக்காக ஆடுகள் இறக்குமதி!

Middle East Middle-East Head Line Middle-East Top Story

மக்காவில் புனித குர்பானிகடமைகளுக்காக ஆடுகள் இறக்குமதி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Imported goats sacred curiosities Mecca Tamil news midleeast Tamil

ஹஜ் யாத்திரையின் புனிதக் கடமைகளில் ஒன்றான உளூஹிய்யா எனப்படும் குர்பானியை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து இதுவரை சுமார் 1.4 மில்லியன் ஆடுகள் புனித மக்காவிற்குள் ஜித்தா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஆடுகள் இறக்குமதியாளர்களுக்கு கடந்த வாரம் வரை 61,813 பெர்மிட்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என சவுதியின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகத்தின் மக்கா பிரதேச இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஹஜ் சீஸனுக்காக 131 கால்நடை மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டு இறக்குமதியாகும் ஆடுகளின் உடல்நிலை, சுகாதாரம், எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றது, அதன் மேல் குறியீடுகளை எழுதும் பணி போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவக் குழுவினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்காவை சுற்றியுள்ள காக்கியா, ஓல்டு ஸூமைசி, ஷராயீ, நூரிய்யா, ஹாதா, ஹூசைனியா மற்றும் ஜூரைனா போன்ற பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Imported goats sacred curiosities Mecca Tamil news midleeast Tamil
Image from  arabnews

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •