Type to search

துபாயில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசென்ஸ் !

Middle East Middle-East Head Line Middle-East Top Story

துபாயில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசென்ஸ் !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Dubai August 1 Liquidation License Vehicles midleast Tamil news

துபாய் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ‘முலுக்கியா’ (Mulukiya) எனப்படும் பிளாஸ்டிக் அட்டை லைசென்ஸ் தரப்படாது. இனி அனைத்து வாகனங்களின் லைசென்ஸூம் ‘ஆயுட்கால லைசென்ஸாக’ ((Life Time License) கருதப்படும்.

ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்கள் வழமைபோல் வாகனப் பரிசோதனையை முடித்து இன்ஷூரன்ஸை புதுப்பித்துவிட்டால் உங்களுடைய வாகன லைசென்ஸ் ஆட்டோமெட்டிக்காக ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுவிடும்.

புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸ் அட்டையின் காப்பி உங்கள் ஈமெயில்களுக்கு அனுப்பப்படுவதுடன் துபையில் RTA Dubai App, Dubai Drive App ஆகிய ஆப்பிலும் அல்லது website www.rta.ae என்ற இணைய தளத்திற்குள்ளும் எப்போதும் காணக் கிடைக்கும் அல்லது தொலைபேசியில் அழைத்தும் தெரிந்து கொள்ளலாம் call centre (8009090) .

இந்த விர்ச்சுவல் லைசென்ஸ் (Virtual License) அமீரகத்திலும், பிற சர்வதேச நாடுகளிலும் துபாய் லைசென்ஸாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்த விர்ச்சுவல் லைசென்ஸ்களில் வாகன அனுமதி காலாவதியாகும் நாள் பற்றிய குறிப்பும் இடம்பெறாது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு வாகனங்களும், வாடகைக்கு இயங்கும் வாகனங்களும் (Rent a car), டேக்ஸிக்களும் முதற்கட்டமாக முலுக்கியா இல்லா திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக கடந்த மே மாதம் முதல் துபையில் இயங்கும் தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. இறுதி மற்றும் மூன்றாம் கட்டமாக அனைத்து தனிநபர் வாகனங்களும் ஆகஸ்ட் 1 முதல் கொண்டு வரப்படவுள்ளது.

இந்தத் திட்டம் துபாய் எமிரேட்டில் மட்டுமே ஆரம்பமாக செயல்படுத்தப்படுகிறது. அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவில் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dubai August 1 Liquidation License Vehicles midleast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •