Categories: Middle-East Head LineMiddle-East Top StorySaudi

திட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன ?

Saudis files vision 2030 8 lack foreigners leave saudi midleeast tamil news

சவுதி அரேபியாவில் சவுதியர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும் வகையில் வெளிநாட்டினரை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களில் சவுதியர் நியமிக்கும் திட்டங்கள் அமெரிக்காவால் பட்டை தீட்டப்பட்ட பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால், அவரது எண்ணம் தோற்றுவிட்டதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் சுமார் 6 சதவிகித வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளதுடன் அதேகால கட்டத்தில் சுமார் 234,000 பேர் வெளியேறியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 670,000 வெளிநாட்டினர் சவுதியை விட்டு வெளியாகி இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 18 மாதங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 800,000 வெளிநாட்டினர் வெளியாகியுள்ளனர்.

சுமார் 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியாகியுள்ள நிலையிலும் சவுதி அரசு எதிர்பார்த்தபடி காலியான அந்த வேலைவாய்ப்புக்களில் சவுதியர்களை பணியமர்த்த முடியவில்லை என்பதுடன் 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் வேலைவாய்ப்பு இன்மையே அதிகரித்துள்ளதாம்.

வெளிநாட்டினர் சரமாரியாக வெளியேறியுள்ளதால் வர்த்தக முதலீடுகள் வெகுவாக குறைந்துவிட்டன.

இன்னொரு புறம் தனியார் துறைகளில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கும், வேலை தேடுவோர் என்ற முத்திரையும் தங்களின் கௌரவத்தை சமூகத்தில் பாதிக்கும் என்பதாலும் தனியார் துறைகளில் வேலை செய்வதைவிட சோம்பேறியாக இருந்துவிடுவதே மேல் என்ற குணம் நிலவுவதாக முஹமது பஸ்காவி என்ற கட்டூரையாளர் சாடியுள்ளதுடன் இந்தத் திட்டமே ஒரு மோசடித் திட்டம் என்றும் இது சவுதி இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் வேலைவாய்ப்புகளை தேடுவதைவிட வேலையே செய்யாமல் சம்பாதிக்கும் மனநிலையே அவர்களிடம் விதைக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

சவுதியில் 2.4 மில்லியன் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளிலும் ‘சப்போர்ட் எஞ்சினியர்களாக’ பணியாற்றும் நிலையில் சவுதியர்கள் 221,000 மட்டுமே. பல்துறை டெக்னீஷியன்களாக 288,000 வெளிநாட்டினர் பணிபுரிகின்ற நிலையில் சவுதியர்கள் சுமார் 206,000 மட்டுமே உள்ளனர்.

விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ் அரசுத்துறையின் கீழுள்ள வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் 3 வருட காலத்திற்கு முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

ஷாப்பிங் மால்களில் உள்ள வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் சவுதியர்களுக்கு மட்டுமே என ஒதுக்கப்பட்டுள்ளது.

2 வருட வேலைவாய்ப்பு விசாக்கள் ஒரு வருடமாக குறைக்கப்பட்டன.

கடந்த 8 மாதங்களில் மட்டும் சவுதியர்களுக்கு என ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் நீடித்த சுமார் 1.35 மில்லியன் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷன் 2030 எனும் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், பெட்ரோலிய வருமானத்திற்கு மாற்றான பொருளாதார திட்டங்கள், சிறு, குறு மற்றும் இடைநிலை வியாபாரங்களை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புக்களில் அதிகமான பெண்களை ஈடுபடுத்துதல் மற்றும் முதலீட்டு ஈர்ப்புகளுக்கான விரிவான திட்டங்கள் என்பவையே முக்கிய அம்சங்களாக கொண்டுள்ளன.

Saudis files vision 2030 8 lack foreigners leave saudi midleeast tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago