Type to search

சவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி!

Middle East Middle-East Head Line Middle-East Top Story

சவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

Saudi Arab 500 disabilities people participated diligence Competition midleeast Tamil news

சவுதியில் 500 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி

சவுதி அரேபியாவின் ஜித்தா, ரியாத், தம்மாம், மதினா போன்ற பல நகரங்களிலிருந்தும் வந்திருந்த 500க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மத்தியில் அவரவர்களின் சிறப்புத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் போட்டி “Ammar Initiative to Support the Creators of Those with Special Abilities” என்ற பெயரில் 2 ஆம் ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த முன்னெடுப்புக்கள் டாக்டர் அம்மார் போகீஸ் என்கிற 26 வயது மாற்றுத் திறனாளி இளைஞரின் முயற்சியால் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அம்மார் அவர்களே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவரது கண்கள் மற்றும் வாய் ஆகிய இரண்டு உறுப்புக்கள் மட்டுமே இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(Disabled people with special talents launch their innovative projects was inspired by Dr. Ammar Bogis, a 26-year-old Saudi, who is paralyzed and can only use his eyes and mouth)

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஆட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர் கடந்த 20 வருட செய்திகளை வருடம், நாள், நேரம் உட்பட அனைத்தையும் மனனமாக வைத்திருந்தார். இன்னொரு இளைஞர் சுயமாக இசைகோர்ப்பு செய்யும் திறமை பெற்றிருந்தார். ஒரு இளம்பெண் தன்னுடைய கால்கள் மூலம் பெயிண்ட், பிரஷ்களை உபயோகித்து அற்புதமான படங்களை வரையும் ஆற்றல் பெற்றிருந்தார். இப்படியாக ஏராளமான திறமையாளர்களை கண்டறிய முடிந்தது.

எதிர்வரும் ஜூலை 25 ஆம் தேதி ஜித்தாவில் நடைபெறவுள்ள விழாவில் நேற்றைய போட்டியாளர்களிலிருந்து 100 பேர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெறுபவருக்கு 50,000 ரியால் பரிசுடன் “SABIC” Academy எனும் கல்விசார் நிறுவனத்தில் 1 வருட சிறப்பு வேலைவாய்ப்பும், பயிற்சியும் இதர உதவிகளும் (One-year contract including training and support) வழங்கப்படும். 2 மற்றும் 3 ஆம் இடம் பெறுபவர்களுக்கும் மேற்படி நிறுவனத்திலேயே 1 வருட சிறப்பு வேலைவாய்ப்பும், பயிற்சியும் இதர உதவிகளும் வழங்கப்படும். இந்த சிறப்பு ஒப்பந்தங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய தகுதியை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும்.

Saudi Arab 500 disabilities people participated diligence Competition midleeast Tamil news

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: