Categories: Middle-East Head LineMiddle-East Top StoryUAE-Dubai

வாலிபனாய் கைதாகி வயோதிபனாய் விடுதலையான இந்தியர்!

Old man arrested Dubai 30 years kerala indian mileeast Tamil news

துபாயில் 1987 ஆம் ஆண்டு விசா ரத்து செய்யப்பட்ட பின் சட்டவிரோதமாக துபையில் தங்கியிருந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது 67 வயதை அடைந்துள்ள முதியவர் ஒருவரை உடன்பிறந்த சகோதரன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் விடுதலையாகிறார்.

துபாயில் கம்ப்யூட்டர்கள் பரவலாக நடைமுறைக்கு வராத காலத்தில் கைது செய்யப்பட்ட வாசுதேவன் மாதவ பணிக்கரால் எந்த ஆண்டில் எந்த தினத்தில் சரியாக கைது செய்யப்பட்டோம் என சரியாக சொல்லத் தெரியவில்லை, துபாயிலுள்ள சிறை ஆவணங்களும் கண்டுபிடிக்க உதவவில்லை.
அவரை விடுதலை செய்வதற்காக துபை போலீஸார் முன்பு முயற்சி செய்தபோது அவரது உறவினர்களை பாஸ்போர்டில் உள்ள முகவரியிலும் கண்டுபிடிக்க இயலவில்லை ஏனெனில் அந்த முகவரி அவர்கள் ஒரு சமயத்தில் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முகவரி.

சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் துபையிலுள்ள அல் அவீர் சிறைக்கு பணிநிமித்தமாக சென்றிருந்த போது தான் இவரைப் பற்றிய தகவலை அறிந்து உதவ முன்வந்துள்ளனர். எனினும் முதியவர் ‘என்னை வீட்டிற்கு அழைத்துப் போங்கள்’ என திரும்பத் திரும்ப சொல்லி அழுதாரே தவிர அவரால் எதையும் சரியாக நினைவுகூர்ந்து பதிலளிக்கத் தெரியவில்லை.

இறுதியாக, தூதரகத்தின் முயற்சியால் கேரளாவில் வெளிவரும் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையில் இவரது படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு அவரது சகோதரர் ஸ்ரீதரன் மாதவ பணிக்கர் என்பவர் வந்து வாசுதேவனை தனது சகோதரன் என அடையாளம் காட்டியுள்ளார்.

தற்போது வாசுதேவனை அவரது சகோதரர் ஸ்ரீதரனிடம் ஒப்படைக்கும் வேலைகளை துவங்கியுள்ளது இந்திய தூதரகமும் துபை போலீஸூம்.

ஸ்ரீதரன் வாசுதேவனை 1980 ஆம் ஆண்டு தன்னுடன் தச்சு வேலைகள் செய்வதற்காக பம்பாய்க்கு (மும்பை) அழைத்துச் சென்றுள்ளார் ஆனால் வாசுதேவன் அங்கு நிற்காமல் ஊருக்கு திரும்பிவிட்டாராம், அதன் பின் வாசுதேவன்துபாய் போய்விட்டதாக ஒருமுறை கேள்விப்பட்டதோடு சரி இவர்களுக்கிடையே எந்தத் தொடர்பும் கடந்த 35 ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.

வாசுதேவன் தனக்கு ஒரு மனைவியும் 2 பிள்ளைகளும் இருப்பதாகவும் கூறுகிறார் ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியாது என்றும் மனைவிக்கு இரத்தப் புற்றுநோய் இருந்ததாகவும் கூறுகிறார் ஆனால் அவரது சகோதரர் ஸ்ரீதரனோ வாசுதேவனுக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றும் இது அவரது மனதில் எழும் மாயத் தோற்றமாகவும் இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

வாசுதேவனுக்கும் தன்னுடைய மனைவி மக்கள் அவர் துபாய் வரும்போது எங்கிருந்தார்கள், எங்கிருப்பார்கள் என சொல்லத் தெரியவில்லை, இனிதான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

சுமார் 30 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலையாகி சகோதரனுடன் சேர்ந்து வாழ ஊர் திரும்ப தயாராகிறார் வாசு தேவன்.

Old man arrested Dubai 30 years kerala indian mileeast Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago