Type to search

துருக்கியில் அரசு ஊழியர்கள் 18,632 பேர் பணிநீக்கம் !

Middle-East Head Line Middle-East Top Story

துருக்கியில் அரசு ஊழியர்கள் 18,632 பேர் பணிநீக்கம் !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

18632 employees dismissed Turkey midleeast Tamil news

துருக்கியில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 2016-ஆம் ஆண்டு ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சி உடனடியாக முறியடிக்கப்பட்டது. புரட்சிக்கு தூண்டியதாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டனர். 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது அதிபராக உள்ள தயீப் எர்டோகன், அண்மையின் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

2வது முறையாக அவர் திங்கட்கிழமை அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அரசு ஊழியர்களில் 18 ஆயிரத்து 632 பேரை பணி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒன்பதாயிரம் பேர் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

18632 employees dismissed Turkey midleeast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: