Categories: Middle-East Head LineMiddle-East Top StoryUAE-Dubai

துபாய் பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்!

make reservation Dubai premiere website mobile app Dubai fram

துபாய் பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி திறக்கப்பட்ட 150 மீட்டர் உயர துபாய் பிரேம் (Dubai Frame) பில்டிங் திறக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 466,000 பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளதன் மூலம் துபாயின் முக்கியமான சுற்றுலாத்தளமாக உருவெடுத்துள்ளது

இந்த துபாய் பிரேம் பில்டிங் செல்வதற்கு இதுவரை அல் ஜபீல் பார்க் கேட் நம்பர் 4 அருகேயுள்ள கவுண்டரில் மட்டுமே டிக்கெட் கொடுக்கப்பட்டு வந்தது.

இனி துபை பிரேம் செல்பவர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வசதியாக www.dubaiframe.ae என்ற இணையதளமும், www.dubaiframe.ae என்ற ஆப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வழியாக முன்பதிவு செய்யும் போது நமக்கு ஏற்ற நேரத்தையும் தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

அதாவது உலகின் மிக உயரமான பில்டிங்காக விளங்கும் துபாய் புரூஜ் கலீபாவில் உள்ள அதே நடைமுறையே இங்கும் பின்பற்றப்படும் என்றாலும் புரூஜ் கலீபாவில் கவுண்டர்களில் ஸ்பாட் டிக்கெட் வாங்குபவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது போல் இங்கு வசூலிக்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் வாங்கும் போதே எத்தனை டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன போன்ற விபரங்களும் தெரியவரும்.

இனி அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட் புக் செய்யும் போது பிற பார்வையாளர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையே 7 மற்றும் 14 நாட்களுக்கு முன்பதாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆப் தவிர்த்து ஏனைய துபாய் பிரேம் டிக்கெட் விற்பனை செய்யும் போலி இணைய தளங்களான www.thedubaiframe.com and www.dubai-frame.com போன்ற பல போலி இணையதளங்கள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் 50 திர்ஹம், 3 முதல் 12 வயது வரையான சிறார்களுக்கு 20 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசம்.

make reservation Dubai premiere website mobile app Dubai fram
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago