Categories: Middle-East Top StoryTrendingUAE-Dubai

வரலாற்றில் பதிவான காதல் திருமணம் !

UAE hospital turns wedding venue father falls sick midleseast Tamil news

மருத்துவமனையில் சிகிச்சைகள் நடக்கும், ஆபரேசன் நடக்கும் ஆனால் திருமணம்! அதுவும் நடந்து விட்டது

கனடாவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில் சந்தித்துக் கொண்ட ரிபாத் என்கிற பங்களாதேஷ் மணமகனுக்கும் ஸனா என்கிற பாகிஸ்தானிய மணமகளுக்கும் எதிர்வரும் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நிக்காஹ் செய்திட சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு கனடாவின் டோரன்டோ நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 200 உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதியன்று ரிபாத்தின் தந்தை ஷஹாதத் சவுத்ரி என்பவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு துபாய் அல் மன்கூல் பகுதியிலுள்ள அஸ்டர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இன்னும் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் எங்கு விமானப் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டவுடன் மணமக்கள் கனடாவிலிருந்து துபைக்கு வரவழைக்கப்பட்டு அஸ்டர் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தந்தையின் முன் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே திருமணம் எளிமையான முறையில் ( நடைபெற்றது.

இத்திருமணத்தின் விருந்தினர்களாக அஸ்டர் மருத்துவமனையின் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர ஊழியர்களுடன் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான உறவினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமணத்திற்கு திட்டமிட்ட தேதியான ஜூலை 17 அன்று அதே ஹோட்டலில் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன் திருமண வரவேற்பு நடைபெறும் என தெரிவித்ததுடன் திருமணத்திற்கு வர இயலாத நிலையிலுள்ள எங்களின் தந்தைக்காக திருமணத்தையே இங்கு கொண்டு வந்து விட்டோம் என பூரிக்கின்றார் புதுமாப்பிள்ளை ரிபாத்.

மருத்துவமனையில் நடைபெற்ற முதல் திருமணம் என்று துபாய் வரலாற்றில் பதிவான ஒன்றாக அமைந்துவிட்டது இந்தத் திருமணம்.

UAE hospital turns wedding venue father falls sick midleseast Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago