Categories: Middle-East Top Story

புனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் கல்லை பாதுகாக்கும் காவலர்கள்!

Hajarul Aswad holy caffa guard guards mildeeast Tamil news

புனிதமிகு கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டு அதனைச் சுற்று வெள்ளியிலான கவசம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புனிதக் கருப்புக்கல்லை தொட்டு முத்தமிட அல்லது கைகளால் தொட்டாவது திருப்தி கொள்ள என ஹஜ் மற்றும் உம்ரா போன்ற புனித யாத்திரைகளுக்கு வந்திருக்கும் யாத்ரீகர்கள் முயற்சிப்பார்கள்.

இந்த கருப்புக்கல் தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் உள்ளதுடன் தவாப் சுற்றலின் ஆரம்பம் மற்றும் முடிவின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இந்த கருப்புக்கல்லை பாதுகாக்க சிறப்பு பயிற்சி பெற்ற 24 காவலர்கள் மணிக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பாதுகாக்கின்றனர்.

இந்த சிறப்புக் காவலர்கள் பல்வேறு உடற்தகுதி மற்றும் தகிக்கும் வெயிலின் சூட்டை தாக்கும் சக்தி ஆகியவற்றை பின்னனியாக கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்கள் கருப்புக்கல்லையும் அதனை முத்தமிட முயற்சிக்கும் மக்களையும் தொடர்ந்து கண்காணிப்பதுடன் பலரும் இக்கல்லை பாதுகாப்புடன் முத்தமிடவும் உதவியும் செய்வார்கள்.

இந்த கருப்புக்கல் ஒரே பாறை துண்டு அல்ல மாறாக இது 8 துண்டுகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன் ஆகப்பெரிய துண்டு ஒரு பேரீத்தம் பழத்தின் அளவே உள்ளது என்பதும் ஆச்சரியமான தகவலே.

இந்த ஹஜருல் அஸ்வத் உள்ள பகுதி ஒவ்வொரு வக்து தொழுகையின் பின்பும் சுத்தம் செய்யப்படுவதுடன் கிருமி நாசினிகள், பன்னீர், அவுத் நறுமணம் பூசப்படுவதுடன் இதற்கெனவே தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பு பொருட்களை கொண்டும் சுத்தப்படுத்தப்படுகின்றன.

Hajarul Aswad holy caffa guard guards mildeeast Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

1 month ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago