Type to search

குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகளுக்கு 1 வருடம் விசா நீட்டிப்பு!

Middle-East Top Story

குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகளுக்கு 1 வருடம் விசா நீட்டிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 year visa extension family lost husband Dubai Tamil news

அமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகளுக்கு 1 வருடம் விசா நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வாழும் வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் வகையில் அமீரக அமைச்சரவை விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது.

அமீரகத்தில் கணவரின் ஸ்பான்சரின் கீழ் ரெஸிடென்ட் விசாவில் மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்ந்து வரும் நிலையில் கணவன் இறந்துவிட்டால் அவர் இறந்த தினத்திலிருந்தும், விவாகரத்து ஆகியிருந்தாலும் விவாகரத்து  தேதியிலிருந்தும் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் தொடர்ந்து 1 வருடத்திற்கு ரெஸிடென்ட் விசாவில் தங்கலாம்.

இந்த ரெஸிடென்ட் விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய யாரும் தேவையில்லை என்பதால் சிறப்பு அனுமதியின் கீழ் அவர்கள் தொடர்ந்து தங்குவதுடன் அந்த ஒருவருட காலத்திற்குள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டாலும் அதற்கேற்ப தங்களது நிலையை சட்டபூர்வ வழிகளில் மாற்றிக் கொள்ளலாம் என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 year visa extension family lost husband Dubai Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: