Type to search

துபாயில் ஜூலை முதல் வீடு தேடி வரும் போக்குவரத்து சேவைகள்!

Middle-East Top Story

துபாயில் ஜூலை முதல் வீடு தேடி வரும் போக்குவரத்து சேவைகள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Dubai services Department Transport t your homes July Tamil news

துபாயில் ஜூலை முதல் போக்குவரத்து துறையின் சில சேவைகள் உங்கள் வீடுகளை தேடி வரவுள்ளது

துபாயில் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் வேலை மற்றும் தொழிலை பாதிக்காத வகையிலும் சில சேவைகளை வாடிக்கையாளர்களின் வீடுகளை தேடிவந்து வழங்கவுள்ளது துபாய் போக்குவரத்து துறை (RTA).

‘Reach-out-to-Customers’ என்ற இந்த புதிய சேவை திட்டத்தின் கீழ் ஆரம்பமாக புதிதாக வாகன உரிமை பதிவு செய்தல், வாகன உரிமை பறிமாற்றம், வாகன ஏற்றுமதிக்கான அனுமதி தருதல் மற்றும் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளை அமீரகம் முழுவதும் உங்களை தேடிவந்து வழங்கவுள்ளனர் துபாய் போக்குவரத்து துறையின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் (Service providers accredited by RTA).

பெறுகின்ற சேவைக்கான கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சேவை கட்டணம் எவ்வளவு, முகவருக்கான சேவை கட்டணம் எவ்வளவு மற்றும் எவ்வாறு இச்சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வது என்பது குறித்து எதுவும் தற்போதைய நிலையில் தெரிவிக்கப்படவில்லை.

துபாயில் துபாய்க்கு வெளியிலுள்ள பிற எமிரேட்டுகளிலும் இருந்தவாறு இந்த சேவைகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் உங்கள் இருப்பிடம் தேடி வரும் முகவர் முன் நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் மேலும் பல சேவைகள் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai services Department Transport t your homes July Tamil news

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •