Type to search

அமீரகத்தில் தனியார் துறைக்கு கூடுதல் விடுமுறை இல்லை !

Middle-East Top Story

அமீரகத்தில் தனியார் துறைக்கு கூடுதல் விடுமுறை இல்லை !

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

no additional vacation private sector emirate midleseast Tamil news

அமீரகத்தில் இந்த வருட ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாளை கொண்டாட அரசு ஊழியர்களுக்கு வியாழன் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து தனியார் துறையினருக்கான விடுமுறை தின அறிவிப்புக்காக காத்திருந்தனர் ஆனால் இந்த வருட நோன்புப் பெருநாள் வரும் வெள்ளிக்கிழமை அன்று அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிறை கணக்கின்படி ஷவ்வால் மாதத்தின் முதல் 2 தினங்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் பொதுவாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்திர விடுமுறை நாட்களாகும் என்றாலும் பெருந்தொகையான ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வாராந்திர விடுமுறையாகவும் உள்ளது. இவ்வாறு வெள்ளிக்கிழமையை மட்டும் வாராந்திர விடுமுறையாக கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த பெருநாள் விடுமுறை அறிவிப்பால் ஒரேயொரு தினம் கூடுதல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த வருட ஷவ்வால் மாதத்தின் முதல் 2 தினங்கள் அமீரக வாராந்திர விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலேயே அமைய பெரும்பாலும் வாய்ப்புள்ளதால் கூடுதல் பெருநாள் விடுமுறைகளை எதிர்பார்த்திருந்த தனியார் துறை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றாலும் ஒருவேளை பிறை பார்ப்பதன் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளாக சனிக்கிழமை அமைந்தால் மட்டுமே தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறையாக அமைந்து வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

3 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு:
இதேபோல் அமீரகத்தில் செயல்படும் வங்கிகளுக்கு ஷவ்வால் மாதத்தின் முதல் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவை எதிர்வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூடப்பட்டிருக்கும். ஒருவேளை ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை சனிக்கிழமையாக அமையுமானால் திங்கள் வரை வங்கிகள் திறக்கப்படாது.

no additional vacation private sector emirate midleseast Tamil news

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: