ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்
Share

நாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip )
ஆனால் ஒரு பெண் மருத்துவர் கவன குறைவாக செயற்பட்டதன் மூலம் நூற்றுக்கான நோயாளிகள் பாதிப்படைந்தனர்
அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.
இது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.
சமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
Keyword:America Lady Doctor Careless Treatment Latest Gossip
The post ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் appeared first on TAMIL NEWS.