Type to search

தமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்

Hot News NEWS Top Story Trending News

தமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தனர்.(Angajan Ramanathan thank sumanthiran sambanthan)

அங்கஜன் ராமநாதன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிமாக இருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பால் அந்த பதவி பறிபோனது.

இந்நிலையில் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அங்கஜன் ராமநாதன்,
’48 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்படவிருந்த நிலையில் அதற்கு எதிராக கடுமையாக உழைத்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவேற்றம் செய்துள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக செயற்பட்டிருந்தால் இந்நேரத்திற்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயரை பிரேரித்தமைக்கு கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வரவேற்பளித்திருந்தார்.

பிரதி சபாநாயகராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு எதிர்பு தெரிவித்திருந்த கூட்டமைப்பு, அதே கட்சியில் சிங்களவர் ஒருவர் தெரிவு செய்வதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை எவ்விதத்தில் நாயமாகும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:Angajan Ramanathan thank sumanthiran sambanthan,Angajan Ramanathan thank sumanthiran sambanthan,Angajan Ramanathan thank sumanthiran sambanthan,


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares