Type to search

போதைப்பொருள் பிரமுகர் “கெசெல்வத்த தினுகவின்” பிரதான சகபாடி கைது

NEWS

போதைப்பொருள் பிரமுகர் “கெசெல்வத்த தினுகவின்” பிரதான சகபாடி கைது

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

(Police arrest main accomplice drug lord Keselwatte Dinuka)

டுபாயில் தலைமறைவாக வசிக்கின்ற வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் பிரதான சூத்திரதாரியான கெசெல்வத்த தினுகவின் குற்றச்செயல்களுக்கு உடந்தையாக செயற்பட்ட பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அசங்க சஞ்சீவ எனும் 33 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வாழைத்தோட்டம் குணசிங்கபுர பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.

கெசெல்வத்த தினுக என்பவர் பாதாள உலக குழுக்களையும், போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளையும் தனது சகபாடிகள் ஊடாக செயற்படுத்தி வருவதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நிலையில் சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி மாதம் தினுகவின் 3 உறவினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Police arrest main accomplice drug lord Keselwatte Dinuka)

More Tamil News

Tamil News Group websites :

 


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: